நடிகை கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இதையடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 'டெட்லி' படத்தில் நடிக்கவுள்ளார்.
அதில் அவருக்குத் தந்தையாக அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஹெல்மர் விகாஸ் பஹ்ல் இயக்கவுள்ள இப்படத்தின் கதை பிடித்துள்ளதால் சற்றும் யோசிக்காமல், கத்ரீனா படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் இருவரும் அப்பா, மகளாக நடித்த விளம்பரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வின் டீசலை படம் இயக்க அழைக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்