தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

7 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சனுடன் இணைந்த அஜய் தேவ்கன்! - amitabh latest movies

நடிகர் அஜய் தேவ்கன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கன்

By

Published : Nov 7, 2020, 4:07 PM IST

Updated : Nov 7, 2020, 4:23 PM IST

பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக வலம்வருபவர்கள் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் இணைந்து ’மேஜர் சாப்’, ’காக்கி’, ’சத்தியாகிரகா’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

இதையடுத்து தற்போது இந்த வெற்றி கூட்டணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. ’மே டே' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கி, தயாரித்து, நடிக்கவுள்ளார். மேலும் இதில் அஜய் தேவ்கன் பைலட்டாக நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜய் தேவ்கன் இதுவரை ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விளையாடி வேட்டையாட வரும் 'ராகவன்' நிகில் முருகன்...'பவுடர்' இயக்குநர் பெருமிதம்

Last Updated : Nov 7, 2020, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details