தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பிரபலம்: மாத வாடகை இவ்வளவா? - அமிதாப் பச்சன் படங்கள்

நடிகர் அமிதாப் பச்சனுக்குச் சொந்தமான வீட்டிற்கு நடிகை கிருத்தி சனோன் பல லட்சம் வாடகை செலுத்திக்  குடியேறியுள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

By

Published : Dec 14, 2021, 3:32 PM IST

இந்தி சினிமாவின் பிக்பி அமிதாப் பச்சனுக்கு மும்பையில் பல்வேறு பகுதிகளில் சொந்தமாக வீடுகள் உள்ளன. அந்தவகையில் அந்தேரி பகுதியில் உள்ள அட்லான்டிஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் இவருக்குச் சொந்தமாக டூப்ளெக்ஸ் வீடு அமைந்துள்ளது.

27, 28ஆவது மாடியில் இருக்கும் இந்த வீட்டை பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டில் வாடகைக்கு இருக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மாத வாடகையாக 10 லட்சம் ரூபாய், முன்பண தொகையாக 60 லட்சம் ரூபாய் இவர் வழங்கியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் என்னது... ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சம் வாடகையா என வாய் பிளந்துள்ளனர்.

நடிகை கிருத்தி சனான் பாலிவுட்டில் தில்வாலே, பரேலி கி பார்ஃபி, கிளாங்க் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மிமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலும் குறிப்பாக படத்தில் இடம்பெற்ற 'பரமசுந்தரி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானது.

இதையும் படிங்க:பட புரமோஷனில் தள்ளுமுள்ளு - அல்லு அர்ஜுன் வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details