தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தன்னை கலாய்த்த நெட்டிசனுக்கு நெற்றியடி பதில் கொடுத்த அமிதாப் பச்சன்! - அமிதாபச்சன்

நடிகர் அமிதாப்பச்சன், கோவிட் - 19 காரணமாக தான் உயிரிழந்து விடுவேன் என்று கூறியவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன்

By

Published : Jul 28, 2020, 3:58 PM IST

Updated : Jul 28, 2020, 10:24 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நான்கு பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் பரிசோதனை முடிவில் தொற்றுநோய் நெகட்டிவ் வந்ததால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இச்செய்தியை நடிகர் அமிதாப்பச்சனும் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், "நீங்கள் கோவிட்-19 காரணமாக இறந்து விடுவீர்கள்" என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கண்ட நடிகர் அமிதாப் அவருக்குப் பதிலடி கொடுத்து தனது ப்ளாக்கில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஹே... உன்னால் உன் அப்பா பெயர்கூட எழுத முடியவில்லை. ஏனென்றால் உனக்குதான் உன் அப்பா யார் என்றே தெரியாதே. இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று நான் இறந்துவிடுவேன் அல்லது நான் வாழ்வேன். ஒருவேளை நான் இறந்து விட்டால் இது போன்ற ஒரு செய்தியைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. பாவம்.

நான் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்தால் அறிவிப்பேன். நம்மைத் தாண்டி ஒரு சக்தி பூமியில் உள்ளது. அது அனைத்து திசையிலும் சுற்றித் திரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jul 28, 2020, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details