நடிகர் ஆதி நடிப்பில் பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'கிளாப்'. நடிகை ஆகான் ஷா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிக் பிரிண்ட் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரை யு-டியூப் தளத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் டீஸரை கண்ட அமிதாப்பச்சன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் படத்தின் நாயகி ஆகான் ஷாவின் திறமையான நடிப்பை குறிப்பிட்டும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், "நடிகர் அமிதாப் பச்சனுக்கு பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் பெரிய நட்சத்திரத்திடமிருந்து கிடைக்கும் போது பாராட்டும் மிகப்பெரியதாகவே இருக்கிறது. எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி கிளாப் படத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தீவிர நோய்த் தொற்றால் உலகமே முடங்கிய நிலையில், இந்தப் படமும் பல பிரச்சினைகளைச் சந்தித்தது. அவை அனைத்தும் கடந்து, இப்போது படத்திற்கு கிடைத்துவரும் மதிப்பும், பாராட்டும் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.