பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் சினிமாவை தவிர்த்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறார். அமிதாப் பச்சன் இந்திய அளவில் மிக அதிக அளவு ரசிகர்களை வைத்துள்ள பிரபலங்களில் ஒருவர். இவர் சமூக வலைதளமான, ட்விட்டரில் தன்னைப் பற்றிய செய்திகள், கருத்துகள், நாட்டு நடப்புகள், புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்துவருகிறார்.
அடடா என்ன மனுஷன்யா.... 'பிக் பி'யின் மனசு இருக்கே! - பீஹார்
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பிகார் மாநிலத்தின் விவசாயிகளின் கடனை செலுத்தியுள்ளார்.
![அடடா என்ன மனுஷன்யா.... 'பிக் பி'யின் மனசு இருக்கே!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3545754-833-3545754-1560399886419.jpg)
இவரது ட்விட்டர் கணக்கை 37 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றிவருகின்றனர். இந்நிலையில் பிகார் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வங்கிக் கடனில் தவித்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகாரில் அதிக அளவு வங்கிக்கடன் பெற்ற விவசாயிகள் 2,100 பேரை தோ்வு செய்து அவர்களின் கடனை செலுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் கொடுத்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றிவிட்டேன்' என்று பதிவிட்டிருந்தார். முன்னதாக உத்தரப் பிரேதசத்தில் 1,398 விவசாயிகளின் கடனையும் மகாராஷ்டிராவின் 350 விவசாயிகளின் கடனையும் அமிதாப்பச்சன் செலுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.