மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
’கடவுள் பரிசளித்த குரல்’ - எஸ்.பி.பி குறித்து அமிதாப்பச்சன்! - அமிதாப் பச்சன்
எஸ்.பி.பியின் குரல் கடவுளால் பரிசளிக்கபட்டது என்று நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
அமிதாப்பச்சன்
இந்நிலையில், எஸ்.பி.பி மரணம் குறித்து நடிகர் அமிதாப்பச்சன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘எஸ்.பி.பியின் குரல் கடவுளால் பரிசளிக்கபட்டது. அவரை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வில் பார்த்தேன். ஒரு எளிய, அடக்கமான மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க:'எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும்’ - எஸ்பிபி சரண் தகவல்!