தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமிதாப் பச்சனின் 'குலாபோ சிதாபோ' - புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு - பாலிவுட் மெகஸ்டார் அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் - ஆயுஷ்மான் குரானா நடிக்கும் 'குலாபோ சிதாபோ' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

amitabh-bachchan
amitabh-bachchan

By

Published : Dec 17, 2019, 10:57 AM IST

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா இணைந்து நடிக்கும் படம் 'குலாபோ சிதாபோ' (Gulabo Sitabo).

குடும்ப நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப்படத்தை ஷுஜித் சிர்கார் இயக்கியுள்ளார்.

ஜுஹி சதுர்வேதி இயற்றியுள்ள இக்கதை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குலாபோ, சிதாபோ ஆகிய இருவரின் வாழ்க்கைப் பயணத்தை நகைச்சுவைத் ததும்ப சித்தரிக்கும் கதையாகும்.

அமிதாப் பச்சன் - ஆயுஷ்மான் குரானா

முற்றிலும் மாறுபட்ட வகையில் முதியவர் கதாபாத்திரத்தில் அமிதாப் எடுத்துள்ள அவதாரம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி கோடை விடுமுறையையொட்டி, 2020 ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...

'தனாஜி: தி அன்சங் வாரியர்' - 2ஆவது ட்ரெய்லர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details