சென்னை: கரோனா விடுமுறையில் கார் மற்றும் பைக் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார் பிரபல காமெடி நடிகை மதுமிதா.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் திரைத்துறை பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். வீட்டில் தங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை செய்து அதை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர்.
யோகா, உடற்பயிற்சி, சமையல், வீட்டை சுத்தம் செய்தல், தோட்டத்தை பராமரித்தல், புத்தகம் படித்தல், எழுதுதல், பிறமொழி கற்றல், போட்டோ ஷூட் போன்ற ஏராளமான விஷயங்களை செய்தனர். அந்த வகையில், நடிகை மதுமிதா இந்த கரோனா விடுமுறையில் பைக் ஓட்ட கற்றுக் கொண்டதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் குறைந்த நாள்களில் பைக் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக்கொண்டேன்.
எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். தற்போது மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் காரில் பயணிக்கிறேன். கார் ஓட்டும் வீடியோவையும் வெளியிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கார் ஓட்ட கற்றுக்கொண்ட மதுமிதா இதையடுத்து, மதுமிதாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, பாதுகாப்பாகவும் செயல்படுமாறு அறிவுரையும் வழங்கியுள்ளனர். ஏராளமான காமெடி கதாபாத்திரங்களில் நடித்து 'ஜாங்கிரி' மதுமிதா என்று அழைக்கப்பட்ட இவர், கடந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்றார். சக போட்டியாளர்களால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக கைகளை கத்தியால் வெட்டிக்கொண்டு, போட்டியை விட்டு வெளியேறினார்.
போட்டோஷூட் நிகழ்த்திய காமெடி நடிகை மதுமிதா இதைத்தொடர்ந்து தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நிகழ்த்தியுள்ள மதுமிதா, கரோனா காலத்தில் கற்றுக்கொண்ட பயனுள்ள விஷயம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டம், பாட்டம்: நடிகை வனிதா மீது புகார்!