ராபர்ட் செமக்கிஸ் இயக்கிய ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் தாக்கத்தால் உருவாகிவரும் படம் ‘லால் சிங் சத்தா’. அமீர் கான், கரீனா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியிருக்கிறார். ’Forrest Gump’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த டாம் ஹேங்ஸுக்கு அமீர் கான் நன்றி தெரிவித்துள்ளார்.
‘தாலாஷ்’, ‘3 இடியட்ஸ்’ படங்களுக்குப் பிறகு அமீர் - கரீனா ஜோடி இணைந்து பணிபுரியும் மூன்றாவது படம் ‘லால் சிங் சத்தா’ ஆகும். இந்த படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கரீனா, இந்தப் படத்தைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அமீர் கானுடன் மீண்டும் நடிப்பதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் அவருடைய தீவிரமான ரசிகை என தெரிவித்துள்ளார்.