தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஆடை' அமலாபால் வெளியிட்ட ஆடையில்லா புகைப்படம்! - அமலாபால் புகைப்படம்

அமலாபால் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படம் வெளியானயதையடுத்து ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர்.

amalapaul

By

Published : Nov 8, 2019, 10:53 PM IST

நடிகை அமலாபால் விவாகரத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'ஆடை' திரைப்படம் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. ரத்னகுமார் இயக்கியிருந்த ஆடை திரைப்படத்தில் அமலா பால் மேலாடை இல்லாமல் நடித்திருந்தால் அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

குளியல் தொட்டியில் அமலாபால்

இதைத் தொடர்ந்து அமலா பால் தற்போது இந்தியில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ்' வெப் சீரிஸின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். இதனிடையே புதுமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

குளியல் தொட்டியில் அமலாபால்

இந்நிலையில் சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அமலாபால், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தும், நெட்டிசன்களுக்கு விவாத பொருளாகவும் வலம்வருகிறார். தற்போது இந்தோனேசியா பாலி தீவில் விடுமுறையை கொண்டாடி வரும் அவர், குளியல் தொட்டியில் பூக்களின் நடுவே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், சில நேரங்களில் நீங்கள் உங்களுக்குள் இருக்கும் பளபளப்பைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் லைக்செய்தும், கலாய்த்து கமெண்டும் செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details