தமிழில் 'சிந்து சமவெளி' படத்தில் அறிமுகமான அமலாபால், பின்னர் தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, திருட்டு பயலே-2, அம்மா கணக்கு, பசங்க-2 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
சுட்டி குழந்தையுடன் அமலாபால்; வைரலாகும் புகைப்படம்! - புதுச்சேரி
நடிகை அமலாபால் சிறுமி ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் நடிப்பில் வெளியான 'ராட்சன்' படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெரும் வெற்றியும் பெற்றது. தற்போது, அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து நடித்து வருகிறார்.
மேலும், அமலாபால் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கோடையை புதுச்சேரியில் கழித்து வரும் அமலாபால், குழந்தை ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.