பிரபல முன்னணி நடிகையாக 80-களில் வலம் வந்தவர் நடிகை அமலா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்த இவர், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்று அதிகாகப்பூர்வ தகவல் வெளியானது.
அமலா நடிக்கும் வெப்சீரிஸ் டீஸர் வெளியீடு! - அமலா அகினேனி
அமலா நடிக்கும் 'ஹை பிரீஸ்டஸ்' எனும் வெப்சீரிஸின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வெப்சீரிஸ்
இந்நிலையில் 'ஹை பிரீஸ்டஸ்' எனும் வெப்சீரிஸின் டீஸர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் கிருஷ்ணா எனும் இயக்குநரால் எடுக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ், வருகின்ற 25-ம் தேதி முதல் ஜீ5இந்தியா(ZEE5India app) செயலியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இந்த வெப்சீரிஸில் அமலாவுடன் நடிகை வரலட்சுமி, சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்தள்ளனர். மேலும், திரில்லர் கலந்த சுவாரஸ்யமான சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் கிருஷ்ணா கூறியுள்ளார்.