தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இரையாகு இல்ல வேட்டையாடு' - புதுப்பாய்ச்சலில் 'அமலா பால்' - அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவை போல டிரெய்லர்

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

amala-paul-starrer-adho-andha-paravai-pola
amala-paul-starrer-adho-andha-paravai-pola

By

Published : Jan 18, 2020, 8:13 PM IST

'ஆடை' திரைப்படத்திற்குப் பிறகு அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதோ அந்த பறவை போல - அமலா பால்

இந்தப்படத்தை புதுமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கியுள்ளார். 2017ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நீண்டநாட்களாக நடைபெற்று வந்தது.

இதனிடையே இத்திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்து, கடந்த ஆண்டில் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் இப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டிருந்தது.

அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண் எவ்வாறு அங்கிருந்து தப்பித்து வீடு திரும்புகிறார் என்பதை விறுவிறுப்பான அதிரடி காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர்.

லிப்ரா புரொடெக்சன் நிறுவனம் தயாரித்துள்ள 'அதோ அந்த பறவை போல' திரைப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் மிரட்டலான நடிப்பை அமலா பால் காட்சிகளில் கடத்தியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சந்தான குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

அமலா பால் தற்போது மலையாளத்தில் 'ஆடு ஜீவிதம்', தமிழில் 'கெடாவர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடும் சாயிஷா பேபி

ABOUT THE AUTHOR

...view details