தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அஜித்தை புகழ்ந்த அமலா பால்! - அஜீத்

நடிகை அமலா பால் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் குறித்தும், அதில் நடித்துள்ள அஜித் குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார்.

Amala paul

By

Published : Jul 24, 2019, 11:40 AM IST

நடிகை அமலா பால் நடிப்பில் 'ஆடை' படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பலரும் படம் குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 'மேயாத மான்' படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான 'ஆடை' படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளியானது.

தற்போது 'ஆடை' படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பால் அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் குறித்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "அஜித்தை போல் ஒரு பிரபலமான நடிகர் இந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தை தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்னும் தலைப்பில் நடித்திருப்பது பாராட்டக்கூடியது. இப்படத்தை அஜித் என்னும் மாஸ் ஹீரோ, அதில் உள்ள சமூக கருத்தை அனைவரிடத்திலும் கூறினால் இது தவறாமல் சேரும், மக்களும் அதனை கவனிப்பர்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details