'மேயாத மான்' பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் 'ஆடை'. இப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வெவ்வேறு விதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆடையில்லாமல் அமலா பால் இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து 'ஆடை' பட டீசர் வெளியானது. இந்த டீசரில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் அமலா பால், தனது உடம்பில் ஆடை இல்லாமல் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றது.
இந்தக் காட்சி தமிழ் சினிமாவில் புதுமுயற்சி என ஆஹா, ஓகோ என பாராட்டப்பட்டாலும், ஒரு சிலர் கலாச்சார சீர்கேடு, அமலா பாலுக்கு புத்தி மலுங்கிவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, "ஆடை இல்லாமல் நிர்வாண காட்சியில் நடித்தபோது 15 பேர் இருந்தனர். அப்போது தான் பாஞ்சாலியாக உணர்ந்தேன்" என, அமலா பால் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோலிவுட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கப்பட்டது. டிசைன், டிசைனாக அமலா பாலை நெட்டிசன்கள் திட்ட ஆரம்பித்தனர்.