தமிழ் சினிமாவில் 'மேயாத மான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இப்படத்தில் வடசென்னை மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப் பிணைந்திருக்கும் கானா பாடல்களை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார். அப்பகுதியில் வசிக்கும் அண்ணன் தங்கை உறவு, அண்ணனின் ஒருதலை காதல் என நகைச்சுவையுடன் மிக எதார்த்தமாக 'மேயாத மான்' படத்தை இயக்கியிருந்தார் ரத்னகுமார். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இளைஞர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அமலா பாலுக்கு பிடித்த ஆடை விரைவில்..!
’மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துவரும் ‘ஆடை’ படத்தின் டீசர் வருகிற ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இதன் வெற்றியைத் தொடர்ந்து நடிகை அமலா பாலை வைத்து 'ஆடை' என்னும் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து கதைக்களம் அமைப்பது அபூர்வமாகவே பார்க்கப்படுகிறது. எனவே, கிடைத்த வாய்ப்பை நழுவ விடாத அமலா பால், சேலஞ்சிங்காக இப்படத்தில் நடித்து வருகிறார். தொலைபேசியால் பெண்களுக்கு நடக்கும் அவலங்களை எடுத்துரைக்கும் திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
'ஆடை' படத்தின் டீசர் வரும் செவ்வாய் அன்று வெளியாகும் என அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ’ஆடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேசமயம் சிலர் விமர்சிக்கவும் செய்தனர்.