தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆந்தாலஜி சீரீஸ்: சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரத்தில் அமலாபால்! - கியாரா அத்வானி

நடிகை அமலாபால் பிரபல இணையத்தொடரின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

amala paul

By

Published : Oct 9, 2019, 11:59 PM IST

Updated : Oct 10, 2019, 8:15 AM IST

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளியானப்படம் 'ஆடை'. இப்படத்தில் சில காட்சிகளில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். இதனால் இப்படம் சர்ச்சைக்குள்ளாகி ஓடியது.

தற்போது மீண்டும் சர்ச்சைக்குள்ளான வெப் சிரீஸ் ஒன்றில் அமலாபால் நடிக்க உள்ளார். கடந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் இணையத்தில் இந்தியில் வெளியான சிரீயஸ் 'லஸ்ட் ஸ்டோரீஸ்'. இந்த சிரீஸில் பெண்களுக்கு காமத்தின் மீதான எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக, கதை இருக்கும். இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த சிரீஸானது நான்கு கதைகளை கொண்டு, நான்கு இயக்குநர்களால் இயக்கப்பட்ட'ஆந்தாலஜி சிரீயஸ்' ஆகும். இதில் கியாரா அத்வானி சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.

இந்நிலையில் இந்த வெப் சீரியஸை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சீரிஸின் ஒரு கதையை தெலுங்கில் சமந்தா நடிப்பில் வெளியான 'ஓ பேபி' பட இயக்குநர் நந்தினி இயக்குகிறார். அவர் இயக்கும் கதையில் அமலா பால் நடிக்க உள்ளார். கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிங்க: என்னை பெண்ணியத்திற்குள் அடைக்க விரும்பவில்லை - 'ஆடை' காமினி

Last Updated : Oct 10, 2019, 8:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details