'ராஜா ராணி' தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவரும் அத்தொடரில் நடித்த சஞ்சீவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர் தற்போது 'ராஜா ராணி 2' தொடரில் ஐபிஎஸ் அலுவலராக நடித்துவருகிறார். இதனிடையே ஆல்யா மானசா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருப்பதாகச் சமீபத்தில் தெரிவித்தார். இதனைக் கேட்ட நெட்டிசன்கள் அவர் 'ராஜா ராணி 2' தொடரிலிருந்து விலகப்போவதாக வதந்தி பரப்பினர்.
இந்நிலையில் தான் சீரியலிருந்து விலகவில்லை என ஆல்யா மானசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது யூ-ட்யூப் தள காணொலியில், "நான் கர்ப்பமாக இருப்பது உண்மைதான். எனக்கே அந்த விஷயம் கடந்த மாதம்தான் தெரியும். நான் தற்போது நான்கு மாதம் கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்த விஷயம் தெரிந்தவுடன் சேனலிலும், இயக்குநரிடமும் கூறினோம்.
அவர்கள் என்ன சொல்வார்கள் என பயத்துடன்தான் சென்றோம். ஆனால் அவர்கள் சிரித்த முகத்துடன் எங்களுக்கு வாழ்த்துக் கூறினார்கள். கர்ப்பிணியாக இருந்தாலும் நீங்கள்தான் சீரியலில் நடிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறிவிட்டனர். அதனால் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க:மூன்று ஆண்டுகளில் மூன்று சொகுசு கார்கள் - அசத்தும் சீரியல் ஜோடி