தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க விரும்பினேன் - அல்போன்ஸ் புத்திரன் - பிரேமம் மலர் டீசர்

நிவின் பாலியின் 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சரின் கதாபாத்திரத்திற்கு முதலில் அசினை தேர்வு செய்ததாக அப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

premam
premam

By

Published : Jun 12, 2021, 3:18 AM IST

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

'பிரமேம்' படம் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை காட்சிகள் முழுவதும் காதல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். பள்ளிப் பருவ பையனாக வரும் ஜார்ஜ் (நிவின் பாலி), மேரி (அனுபமா பரமேஸ்வரன்) பின்னால் சுற்றுவது, கல்லூரி பருவ காலத்தில் தெனாவட்டுடனும் நண்பர்களுடன் லூட்டி அடித்து சுற்றும் ஜார்ஜ், மலர் (சாய் பல்லவி) டீச்சரை பார்த்து காதல் வயப்படுவது, இறுதியாக வாழ்க்கையின் எதார்தத்தை புரிந்து கொண்டு பேக்கரி கடை உரிமையாளரான ஜார்ஜ், செலினை (மடோனா செபாஸ்டியன்) திருமணம் செய்து கொள்ளவது என நிவின் பாலி படம் முழுவதும் மாற்றங்களைக் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இளைஞர்களின் மனதை புரிந்துக்கொண்ட அல்போன்ஸ் புத்திரனின் கதையை உள்வாங்கி திரையில் பிரதிபலித்த நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 'பிரமேம்' பட்டாளங்கள் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்தனர்.

படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனநிலையிலும் 'பிரேமம்' மலர் டீச்சரின் கதாபாத்திரம் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சமீபத்தில் ஃபேஸ்புக் மூலம் ரசிகர்களிடம் உரையாற்றி அல்போன்ஸ் புத்திரன் உரையாடி வந்தார்.

ஃபேஸ்புக் உரையாடல்

அப்போது ரசிகர் ஒருவர், உங்களது படங்களில் பொதுவாக தமிழின் தாக்கத்தை கவனித்திருக்கிறேன். உதாரணம் மலர் டீச்சர் கதாபாத்திரம், தமிழ் பாடல்கள் போன்றவை. கண்டிப்பாக நீங்கள் சென்னையில் வாழ்ந்த போது உங்கள் நண்பர்கள் வட்டம், நீங்கள் வசித்த சூழல் என எல்லாம் உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அது உங்கள் படங்களில் தெரிகிறது.

திரைப்படம் என்பது இயக்குநரின் விருப்பம் தான். அது அவர்களின் அனுபவத்தின் மூலம் பிறக்கிறது. பிரேமம் படத்தில் சண்டனைக்கு, நடனத்துக்குப் பின்னணியில் தமிழ் பாடல் கச்சிதமாக பொருந்துகிறது.

கல்லூரி காட்சிகள், அதன் பின் வந்த மாஸ் காட்சிகள் என எல்லாமே நன்றாக இருந்தது. மலையாளத் திரைப்படங்களில் தமிழ் மொழியின் தாக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள். மலர் கதாபாத்திரம் மலையாளம் பேசுபவராக இருந்தால் எப்படி இருந்திருக்கும் எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், முதலில் நான் திரைக்கதை எழுதும்போது அந்த கதாபாத்திரம், போர்ட் கொச்சியிலிருந்து வரும் மலையாளியாகத்தான் இருந்தது. அதில் அசின் நடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிவினும் முயன்றார். பின் அதை கைவிட்டோம். தமிழ் கதாபாத்திரமாக மாற்றினேன். இது திரைக்கதை எழுத ஆரம்பித்த நிலையிலேயே நடந்தது. என் சிறுவயதில் ஊட்டியில் படித்தேன். கல்லூரி சென்னை. அதனால் தான் இந்த தமிழ் தாக்கம் எனப் பதிவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details