தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2021, 6:22 PM IST

ETV Bharat / sitara

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா': முதல் பாகம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் வெளியாவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Pushpa
Pushpa

சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக ஃபகத் பாசிலும் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரமான 'புஷ்பா ராஜ் அறிமுகம்' டீஸர், இதுவரை இணையத்தில் அதிகம் பேர் பார்த்த டீஸர் என்னும் சாதனையைப் படைத்துள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தமிழில் பென்னி தயாள் பாடுகிறார்.

இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் வெளியீடாக இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பாகுபலி'...'கேஜிஎஃப்' வரிசையில் இணைந்த அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'!

ABOUT THE AUTHOR

...view details