தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளன. சமூக வலைதளங்கில் படுஆக்டிவாக உள்ள அல்லு அர்ஜுன் அடிக்கடி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவு செய்துவருகிறார் .
இந்நிலையில் அல்லு அர்ஜுன் நேற்று தனது ஒன்பதாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ''ஒன்பது ஆண்டு திருமண வாழக்கை. நேரம் வேகமாகச் செல்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் நம் காதல் வளர்கிறது" என்று குறிப்பிட்டு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகப் பரவிவருகிறது.