ஹைதராபாத்: காலங்கள் வேகமாகச் சென்றாலும் நாளுக்கு நாள் உன் மீது வைத்துள்ள காதல் கூடிக்கொண்டதான் இருக்கிறது என்று தனது ஒன்பதாவது திருமண நாளில் மனைவிக்கு உணர்வுப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படத்தை பதிவிட்டு, உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அதில், ”திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம் வேகமாகச் செல்கிறது. ஆனால் காதல் ஒவ்வொரு நாளும் உன் மீது கூடிக்கொண்டேதான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது குழந்தைகள் ஆயான், ஆரஹ் ஆகியோருடன் இணைந்து திருமணநாள் கொண்டாட்டத்தைப் பதிவிட்டிருந்த அவர், தனது வாழ்க்கையின் க்யூட்டான கிஃப்ட் என்று தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ஆலா வைகுண்டபுரமுலு படம் சூப்பர் ஹிட்டானதால் அவர் குஷியில் இருக்கிறார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலுள்ள கிராமங்கள் தோறும் ஒலித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் பாடலாக மாறியது.
இந்தப் பாடலை டிக்டாக் விடியோவாக ஏராளமானோர் பதிவிட்டுக் கொண்டாடினர். இதுதொடர்பாக தனது ட்விட்டரிலும் அல்லு அர்ஜூன் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பாடலுக்கு மாற்றுத்திறனாளிகள் இருவர் காதல் பொங்க நடனமாடி வெளியிட்ட டிக்டாக் விடியோவை பதிவிட்ட அவர், தனது இதயத்தைத் தொட்ட புட்டபொம்மா வெர்ஷன் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனை எனக்கு தெரியாது - ஷகிலா