தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுுன். நடிப்பு, நடனத்திற்கென தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய முழுவதும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்னும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.
செம்மரம் கடத்தல் தொடர்பான கதையை அடிப்படையாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திர டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஆகஸ்ட் 13ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அல்லு அர்ஜுனே அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம், எனக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.