கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, தேறி வருகின்றனர். சிலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தும் உள்ளனர். முன்னதாக தெலுங்கு 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பின் முறையான சிகிச்சைப் பெற்று சமீபத்தில் அவர் பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளார்.
தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு: நெட்டிசன்கள் பாராட்டில் ஸ்டைலிஷ் ஸ்டார் - கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்பாடு
ஹைதராபாத்: தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், கரோனாவிலிருந்து மீண்ட அல்லு அர்ஜுன் தன் குடும்பத்தின் ஒரு அங்கமான தன்னிடம் வேலை செய்யும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து தன்னிடம் வேலை பார்க்கும் 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்.
அவரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாரட்டு தெரிவித்துள்ளனர். அல்லு அர்ஜுன் முன்னதாக கரோனா தொற்றல் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதும், வாய்ப்பு கிடைக்கும்போதும் தன் ரசிகர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.