நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் உருவாகிவரும் திரைப்படம், 'சாகுந்தலம்'. காளிதாஸ் எழுதிய 'சாகுந்தலா'வை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் நடிகர்கள் தேவ் மோகன், அதிதி பாலன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
திரைத்துறையில் என்ட்ரியான அர்ஹா
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் மகள், அர்ஹா இணைந்திருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (ஜூலை 15) முதல் 10 நாள்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியில் அல்லு குடும்பம்:
இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அல்லு குடும்பத்தினருக்கு இதுவொரு பெருமையான தருணம். நான்காவது தலைமுறையான அர்ஹா அல்லு, 'சாகுந்தலம்' படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைகிறார்.
இந்தப் படம் மூலம் என் மகளுக்கு வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி. சமந்தா படத்தில் என் மகள் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இந்த வாரம், அப்டேட் வாரம்... மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!