தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால். இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லானாக ஃபகத் பாசிலும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்த ஆண்டு, ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் கதாபாத்திரமான 'புஷ்பா அறிமுகம்' டீசர், அவரது பிறந்தநாளான ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.
இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 792 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றது. இந்தநிலையில், 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்து டீசர்களில் முதலிடத்தில் புஷ்பா டீசர் இருக்கிறது. தற்போது இந்த டீசர் இணையதளத்தில், 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த டீசராகவும் 1.6 மில்லியன் லைக் பெற்ற டீசராக உள்ளது. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை டீசர் வெளியான சில மாதங்களிலேயே 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த டீசராக 'புஷ்பா அறிமுகம்' உள்ளது.