மலையாளத்தில் சுரஜ் வெஞ்சராமுடு நடிப்பில் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. பாசத்திற்காக ஏங்கும் தந்தை, வெளிநாட்டிலிருந்து மகன் கொண்டு வரும் ரோபோவுடன் நட்பாகி விடுகிறார்.
நெகிழ்ச்சியான சுவாரசியமான திரைக்கதையால் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரேவற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளையும் வென்றது.
தமிழில் இப்படம் 'கூகுள் குட்டப்பன்' என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் கே.எஸ். ரவிக்குமார் 'பிக் பாஸ் புகழ்' தர்ஷன், லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.