தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நல்லது கொஞ்சம் லேட்டா தான் வரும்' - சமாளித்த ஆலியா - ப்ரமாஸ்த்ரா திரைப்பட தாமதம் குறித்து ஆலியா விளக்கம்

தனது கனவுத் திரைப்படமான 'பிரம்மாஸ்த்ரா' படத்தில் நடித்து வரும் ஆலியா படத்தின் தாமதம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு புத்திசாலித்தனமான பதிலை அளித்துள்ளார்.

Alia Bhatt on Brahmastra delay says Good things take time
Alia Bhatt on Brahmastra delay says Good things take time

By

Published : Dec 4, 2019, 10:23 PM IST

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஆலியா பட் நடிப்பில் தயாராகி வருகிறது 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படம். சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் தயாராகி வரும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுதியாகவே உள்ளது.

இத்திரைப்படத்தின் ரிலீசானது தாமதமாகிக்கொண்டே வருவதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 'படம் எப்போதான் ரிலீசாகும்?' என ரசிகர்கள் கேட்கும் கேள்விக்குத் தன் சார்பில் பதிலை முன்வைத்துள்ளார் ஆலியா.

ரன்பீர் கபூர், ஆலியா பட்

அதாவது 'இது ஒரு வித்தியாசமான திரைப்படம். சில நல்ல விஷயங்கள் வருவதற்கு தாமதம் ஆகத்தான் செய்யும்' எனப் பதிலளித்துள்ளார் ஆலியா.

மூன்று பாகங்களாக வெளிவரயிருக்கும் 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆலியாவுக்கும் ரன்பீர் கபூருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் ஆகும் என்றும் செய்திகள் கசிந்து வருகின்றன.

இதையும் படிங்க: சீனாவில் தடம் பதிக்கும் 'கோல்ட்' திரைப்படம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details