தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தலைவி அனுபவங்களை புத்தகமாக்கும் விஜய்! - A.L. vijay write a book on his thalaivi working experience

தலைவி படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் பணி செய்த அனுபவங்களை புத்தகமாக்கும் முயற்சியில் இயக்குநர் விஜய் ஈடுபட்டுள்ளாராம்.

தலைவி அனுபவங்களை புத்தகமாக்கும் விஜய்
தலைவி அனுபவங்களை புத்தகமாக்கும் விஜய்

By

Published : Sep 15, 2021, 6:59 PM IST

சென்னை: இயக்குநர் விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் தலைவி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியான பெரிய பட்ஜெட் படமாக இது அமைந்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தை பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்றை திரித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இப்படத்தின் உருவாக்கத்திற்காக இயக்குநர் விஜய் ஒன்றரை ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும்; பல்வேறு புத்தகங்களை படித்து இப்படத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த அனுபவங்களை தொகுத்து புத்தகம் எழுதும் திட்டத்தில் விஜய் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளை அவர் விரைவில் தொடங்கவிருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:வலிமை: இது ‘தல தீபாவளி’ கிடையாதாம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details