தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#TheBalaChallenge: 'ஆல் தி பெஸ்ட் ஒன் பாலா டூ அனதர் பாலா' அக்ஷய் குமாரின் புதிய வீடியோ - ஆயுஷ்மான் குரானா

அக்ஷய் குமாரின் #TheBalaChallenge ஏற்று ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் 'சைத்தான்கே சாலா' பாட்டிற்கு நடனமாடி வருகின்றனர்.

bala

By

Published : Oct 10, 2019, 10:05 PM IST

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா 'பாலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் அக்ஷய் குமாரின் #TheBalaChallenge நடனமாடியுள்ளார்.

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கியுள்ள ‘ஹவுஸ்ஃபுல் 4’ (#Housefull4) படத்தில் அக்‌ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், பூஜா ஹெக்டே, க்ரிட்டி சனோன், பாபி தியோல், க்ரிட்டி கர்பந்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு சொஹெல் சென், விபின் பட்வா, தனிஷ்க் பாக்ஜி, குரு ரந்தவா, ராஜத் நாக்பால், தேவி ஸ்ரீ பிரசாத் என ஆறு பேர் இசையமைத்துள்ளனர். பாலிவுட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடயே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

சமீபத்தில் 'சைத்தான்கே சாலா' என்ற பாடல் வெளியாகியது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. மேலும் அக்ஷய் குமார் #TheBalaChallenge என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களுக்கு இந்த பாடலுக்கு நடனமாடி சேலஞ்ச் விடுத்தார்.

இவரின் இந்த சேலஞ்சை ஏற்ற ரசிகர்கள் வீடியோவிற்கு நடனமாடி அந்த வீடியோவை அக்ஷய்குமாருக்கு டேக் செய்தனர். இந்நிலையில் பாலிவுட்டின் நடிகர் ஆயுஷ்மான் குரானா அந்த பாடலுக்கு நடனமாடி அதை அக்ஷய்குமாருக்கு டேக் செய்துள்ளார். அதை பார்த்த அக்ஷய் குமார், 'ஆல் தி பெஸ்ட் ஒன் பாலா டூ அனதர் ஆல் தி பெஸ்ட் பிரதர் விரைவில் சந்திப்போம்' என்று வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

'ஹவுஸ்ஃபுல் 4' படத்தில் அக்ஷய்குமார் கதாபாத்திரத்தின் பெயர் பாலா. அதேபோல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் அவரும் 'பாலா' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் வாசிங்க: மயிரோடு தொலையும் 'பாலாவின்' அடையாளம் - வெளியான ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details