ஒவ்வெரு வருடமும் போர்ப்ஸ் பத்திரிக்கை அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிடும். தற்போது இந்த வருட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய நடிகர் அக்ஷ்ய் குமார் தான் இந்திய அளவில் முதல் பத்துபோ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
அடேங்கப்பா நம்ம 'பக்ஷி ராஜன்' அக்ஷ்ய்குமார் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்....! - அயன்மேன்
உலகில் அதிக சம்பளம் வங்கும் பத்து நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
Akshay Kumar
இப்பட்டியல் முதலில் இடத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான ராக் (எ) ட்வெய்ன் ஜான்சன் ரூ 640 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் ரூ 466 கோடியுடன் நான்காவது இடத்தில் உள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜான் ரூ 415 வருமானத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
போர்ப்ஸ் பட்டியல் விபரம் இதோ,
- ட்வெய்ன் ஜான்சன் (தி ராக்) - ரூ 640 கோடி
- கிறிஸ் ஹெம்ஸ் வொர்த் - ரூ 547 கோடி
- ராபர்ட் டவுனி ஜூனியர் (அயன்மேன்) - ரூ 473 கோடி
- அக்ஷ்ய்குமார் - ரூ 466 கோடி
- ஜாக்கி ஜான் - ரூ 415 கோடி
- பிராட்லி கூப்பர் (ராக்கெட்) - ரூ 408 கோடி
- ஆடம் சாண்ட்லர் - ரூ 408 கோடி
- கிறிஸ் இவான்ஸ் (கேப்டன் அமெரிக்கா) - ரூ 311 கோடி
- பால் ரட் (ஆன்ட் மேன்) - ரூ 293 கோடி
- வில் ஸ்மித் - ரூ 250 கோடி