அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படம் அடுத்த மாதம் 9 ஆம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் அக்ஷய் குமார் திரைப்படம்! - அக்ஷய் குமார் திரைப்படம்
சென்னை: அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’லட்சுமி பாம்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![ஓடிடி தளத்தில் வெளியாகும் அக்ஷய் குமார் திரைப்படம்! லட்சுமி பாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9000026-170-9000026-1601476731941.jpg)
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காஞ்சனா’. இத்திரைப்படத்தை இந்தியில் ’லட்சுமி பாம்’ என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படம் நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஹாட்ஸ்டார் டிஸ்னி பிளஸ் தளத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழைத் தொடர்ந்து இந்தியிலும் இத்திரைப்படம் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.