தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அக்ஷய் என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறார்'- மனைவி ட்விங்கிள் பெருமிதம் - akshay kumar wife Twinkle reveals

நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கணவரின் சேவையைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'அக்ஷய் என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறது'- மனைவி ட்விங்கிள் பெருமிதம்!
'அக்ஷய் என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறது'- மனைவி ட்விங்கிள் பெருமிதம்!'அக்ஷய் என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறது'- மனைவி ட்விங்கிள் பெருமிதம்!

By

Published : Mar 29, 2020, 10:23 AM IST

உலக நாடுகளை மிரட்டிவரும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. நாட்டில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு உதவ முன்வருமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் நிதியுதவி வழங்கிவருகின்றனர். அந்தவகையில் நடிகர் அக்ஷய் குமார் தேசிய நிவாரண நிதிக்காக ரூ.25 கோடி வழங்கினார்.

இது குறித்து அவரின் மனைவியும், எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "இந்த மனிதர் என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறார். இவ்ளோ பெரிய தொகை கொடுப்பது குறித்து அக்ஷய் குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர், திரைத் துறைக்கு வரும்முன் என்னிடம் ஒன்றுமே இல்லை, ஆனால் தற்போது நான் நல்ல நிலைமையில் உள்ளேன் என்றார்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: தேசிய நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கிய அக்ஷய் குமார்!

ABOUT THE AUTHOR

...view details