தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான 'சந்திரமுகி' படத்தை பாலிவுட்டில், கடந்த 2007ஆம் ஆண்டு 'பூல் புலையா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
அக்ஷய் குமார், வித்யா பாலன் நடித்துள்ள இப்படத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். மற்ற மொழிகளைப் போலவே பாலிவுட்டிலும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதுமட்டுமல்லாது பிரியதர்ஷன் - அக்ஷய் குமார் 'ஹீரோ ஃபெர்ரி', 'கரம் மசாலா', 'பாஹம் பாக்', 'தி தனா தான்', 'கட்டா மிட்டா' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
தற்போது மீண்டும் பிரியதர்ஷன், அக்ஷய் குமாரை வைத்து புதியப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக 'ரக்ஷா பந்தன்' படப்பிடிப்பு தளத்தில் வைத்து பிரியதர்ஷன், அக்ஷய் குமாரைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் புதியப் படத்தில் அக்ஷய் குமார் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் பிரியதர்ஷன் புதியப்படம் தொடர்பான முன் தயாரிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது பிரியதர்ஷன், மோகன்லாலை வைத்து இயக்கிய 'மரைக்காயர்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. 'மரைக்காயர்' படத்தை இயக்கி முடித்தவுடன் இந்தியில் ஷில்பா ஷெட்டி நடிப்பில் 'ஹங்கமா 2' என்னும் படத்தையும் பிரியதர்ஷன் இயக்கி முடித்தார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: காதலில் குருடாக இருக்காதீர்கள் - 'பூல் புலையா 2' கார்த்திக் ஆர்யன் வெளியிட்ட புகைப்படம்