தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா விழிப்புணர்வு: குறும்படம் வெளியிட்ட அக்ஷய்குமார்! - Covid-19

நடிகர் அக்ஷய்குமார் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அக்ஷய் குமார்
அக்ஷய் குமார்

By

Published : Jun 4, 2020, 4:27 PM IST

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலிருக்கும் திரை பிரபலங்கள், அவ்வப்போது கரோனா வைரஸ் குறித்து தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறி வீடியோவை வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அக்ஷய்குமார் பணிக்கு செல்லும்போது அருகில் இருந்த ஒருவர் லாக்டவுன் காலத்தில் எதற்காக வேலைக்கு செல்கிறார்? என்று கேட்கிறார்

அக்ஷய் குமாரின் பதிவு

அதற்கு பதிலளித்த அக்ஷய்குமார், லாப சூழலில் வேலைக்கு செல்வது தவறில்லை என்றும், அரசு அறிவுறுத்தியதுபோல் மாஸ்க் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்றினால் வைரஸ் தொற்று தம்மை நெருங்காது என்று கூறியுள்ளார்.

அந்த குறும்படம் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details