'மூடர் கூடம்', 'அலாவுதீனின் அற்புத கேமரா’ ஆகிய படத்திற்கு பிறகு நவீன் இயக்கும் படம் 'அக்னி சிறகுகள்'. இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக 'அக்னி சிறகுகள்' படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் நடிக்கவுள்ளார் என்று அறிவித்தனர். இந்நிலையில் 'அக்னி சிறகுகள்' படத்தில் மேலும் ஒரு கதாநாயகி இணையவுள்ளார் என்று அறிவித்துள்ளனர். கமலின் இரண்டாவது மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் 'கடாரம் கொண்டான்' படத்திற்கு பிறகு 'அக்னி சிறகுகள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அக்னி சிறகுகளில் ஒரு சிறகான கமல் மகள்! - மூடர் கூடம்
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தில் கமல் மகள் இணைந்திருப்பதை, அருண் விஜய் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
![அக்னி சிறகுகளில் ஒரு சிறகான கமல் மகள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4638827-thumbnail-3x2-agni.jpg)
agni siragugal
அக்ஷரா 'அக்னி சிறகுகள்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதை அருண் விஜய் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்தில் ஷாலினி பாண்டே, ரெய்மா சென், தலைவாசல் விஜய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அக்னி சிறகுகள்' படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளது.
இதையும் படிங்க: கை விட்ட பிக் பாஸ்: காப்பாற்றிய தமிழ் சினிமா!