தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகிய அக்ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' - South Asia International Flim Festival

அக்ஷரா ஹாசன் நடித்துள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா
தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா

By

Published : Dec 11, 2020, 10:45 PM IST

சென்னை:ஹெச்பிஓ-வின் (HBO) 17ஆவது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அக்ஷரா ஹாசனின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படம் தேர்வாகியுள்ளது.

ட்ரெண்ட் லவுட் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள திரைப்படம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு. இதில் அக்ஷரா ஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் பிரபல பாடகி உஷா உதுப், மால்குடி சுபா, ஜார்ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அக்ஷரா ஹாசன், " "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (The Myth Of The Good Girl)" படம் HBOவின் 17ஆவது தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் (SAIFF) அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது , இது தெற்காசிய / இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான 'மிகப்பெரிய' திரைப்பட பிரீமியர்! ஆகும். வரும் 18ஆம் தேதி இப்படம் திரையிடப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெளியானது அதர்வாவின் 'குருதி ஆட்டம்' டீசர்

ABOUT THE AUTHOR

...view details