தென்னிந்திய டிஜிட்டல் தளமான ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராஜமூர்த்தி இயக்கத்தில், நடிகை அக்ஷரா ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார்.
அக்ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு': சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வு - அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பட வெளியீடு
சென்னை: அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது என்னும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கும்விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் அக்ஷரா ஹாசனுடன் பிரபல பாடகி உஷா உதுப், மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், கிரன் கேசவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளீயிட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்தப் படம் திரையரங்கில் வெளியாகும் முன்பே HBO நிறுவனம் நியூ ஜெர்ஸியில் நடத்தும் சர்வதேச தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாகத் தேர்வுசெய்ப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தத் திரைப்படம் போஸ்டன் (Boston) நகரில் நடந்த Caleidoscope திரைப்பட விழாவில் தேர்வானது.