'லிஃப்ட்' என்னும் ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் நாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார், நடிகர் கவின்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் ஈவு இரக்கமற்ற மறுபக்கத்தை தோலுரித்துக் காட்டிய இத்திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. இதில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார்.
கவின் அடுத்ததாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ரவுடி பிக்சர்ஸ்க்காக 'ஊர்குருவி' எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி பூஜையுடன் கவின் நடிப்பில் ‘ஆகாஷ் வாணி’ எனும் வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ரெபா மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.