மலையாள இளம் நடிகர் நிவின் பாலியின் முதல் படமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படம் மூலம் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ்.
இவர், நிவின் பாலி, ஜெய் சூர்யா, திலீப், துல்கர் சல்மான், மம்மூட்டி உள்ளிட்டோரின் படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜு வர்கீஸ், தற்போது 'சாஜன் பேக்கரி சின்ஸ் 1962' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், லீனா, கிரேஸ் ஆண்டனி, ரஞ்சிதா மேனன், கணேஷ் குமார், ஜாஃபர் இடுக்கி மற்றும் பல புதுமுகங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ஃபென்டாஸ்டிக் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை அருண் சந்து இயக்குகிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். குரு பிரசாத் எம்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.