’நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறர். அதில் அஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி வலிமை படத்தில் அதிரடி பைக் ரேஸ், கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
வலிமை பட ஷூட்டிங் புகைப்படங்கள் லீக் - அதிர்ச்சியில் படக்குழு! - வலிமை படப்பிடிப்பு
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
![வலிமை பட ஷூட்டிங் புகைப்படங்கள் லீக் - அதிர்ச்சியில் படக்குழு! இணையத்தில் லீக்கான வலிமை பட ஷூட்டிங் புகைப்படங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6299414-thumbnail-3x2-ajith.jpg)
இணையத்தில் லீக்கான வலிமை பட ஷூட்டிங் புகைப்படங்கள்
'வலிமை' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்துமுடிந்த நிலையில்,அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோடில் நடைபெற்று வருகிறது. அதில் அட்டகாசமான பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:பெண்களின் ஒத்துழைப்பு பிடித்துள்ளது - 'தேவி' கஜோல்