நேர்கொண்ட பார்வை படத்திற்கு நடிகர் அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்துவருகிறார். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துவருகிறார். வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பைக் ரேஸ் காட்சி படமாக்கப்பட்டபோது, எதிர்பாராவிதமாக அஜித்திற்கு விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தல அஜித் தற்போது தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் தங்கையின் மகள் திருமணத்திற்குச் சென்றார். கருப்பு உடை அணிந்துகொண்டு மீசை, தாடியில்லாமல் இருக்கும் அஜித்தின் புதிய லுக் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாக அஜித் தனது குடும்பத்தில் நடக்கும் திருமணத்திற்கு சென்றால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியே பரவவிடாமல் பார்த்துக்கொள்வார்.