தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BMW பைக்கில் மாஸாக பறந்த அஜித்: வைரலான புகைப்படம் - வலிமை போஸ்டர்

பைக்கில் அஜித் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Ajith
Ajith

By

Published : Jul 22, 2021, 4:58 PM IST

'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து அஜித்தை வைத்து ஹெச். வினோத் 'வலிமை' படத்தை இயக்கிவருகிறார். இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராமல் இருந்தது.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதனுடன் வலிமை மோஷன் போஸ்டரும் வெளியானது.

பைக்கில் அஜித்

'வலிமை' போஸ்டர் நீண்டநாள்களுக்குப்பின் வெளியானதையடுத்து சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். போஸ்டர் வெளியான சில மணிநேரத்திலேயே #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியா அளவிலும் உலகளவிலும் ட்ரெண்டானது.

பைக்கில் அஜித்

’வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்த நிலையில், எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடிக்க தற்போது படக்குழுவினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைக்கில் அஜித்

இந்நிலையில், அஜித் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் செல்லும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இந்திய அளவில் சாதனை படைத்த 'வலிமை'!

ABOUT THE AUTHOR

...view details