மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினி அஜித் (Shalini ajith). அப்போதே பேபி ஷாலினி என அழைக்கப்பட்ட இவர் மலையாளத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.
பிறகு தமிழில், 'காதலுக்கு மரியாதை' படம் கோலிவுட்டில் ஹீரோயினாக ஷாலினி கால்பதித்தார். மூன்று அண்ணன்களுக்கு இடையே குட்டி தங்கச்சியாக இருந்த மினி (ஷாலினி) விஜய்யுடன் காதலில் விழ, அதை அவர் குடும்பமே எதிர்க்கிறது. இறுதியில் அவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்கின்றனர் என்பதே படத்தின் கதை.
கதாநாயகியாக நடித்த முதல் படமே ஷாலினுக்கு கோலிவுட்டில் வரவேற்பு கிடைக்க கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும், அலைபாயுதே போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.
'அமர்க்களம்' (Amarkalam) படம் மூலம் அஜித், ஷாலினி முதல்முறையாக இணைந்து நடித்தனர். நடித்த முதல் படத்திலேயே அஜித், ஷாலினி மீது காதலில் விழ, ஷுட்டிங் செட்டிலேயே காதலைக் கூறியுள்ளார்.