கோடிக்கணக்கான ரசிகர்கள், கோடிகளில் சம்பளம் எனத் தற்போது உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். திரைத் துறையில் யாருடைய உதவியுமின்றி வந்து தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அஜித்தின் ஆரம்பகாலம் அடிகளுக்கு உட்பட்டது.
எத்தனையோ அடிகளை வாங்கிய அஜித் 'அமராவதி' படம் மூலம் அறிமுகமானார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து நடித்தார். பல வெற்றி படங்களை கொடுத்தார்.
இந்நிலையில், நேற்று (ஆக.4) அஜித் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை தல ரசிகர்கள் #30YearsOfAjithKumar என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து சமூகவலைதளங்களில் கொண்டாடினர்.