தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ் லுக்கில் 'வலிமை' வில்லன்: வெளியான ஃபர்ஸ்ட் லுக் - வலிமை அப்டேட்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்திகேயாவின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர், அவரது இமேஜ் அடங்கிய புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

valimai
valimai

By

Published : Sep 21, 2021, 5:28 PM IST

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோரும் நடிக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றது. 'வலிமை' அப்டேட் கேட்டு நச்சரித்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்தது.

முக்கியமான சண்டைக்காட்சி

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்ட நிலையில் முக்கியமான சண்டைக்காட்சி மட்டும் கரோனா காரணமாக எடுக்கப்படாமல் இருந்தது. இதற்காக படக்குழுவினர் அஜித்துடன் சமீபத்தில் ரஷ்யா சென்று படப்பிடிப்பை நடத்தினர்.

வில்லன் ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்திகேயா இன்று (செப்.21) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்குப் பரிசளிக்கும் விதமாக ’வலிமை’ படக்குழுவினர் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் கார்த்திகேயா கையில் மதுபான பாட்டிலுடனும் போனுடனும் ஸ்டைலாக காட்சியளிப்பதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் 'வலிமை' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: 10 ஆண்டு காதலியைக் கரம்பிடிக்கும் 'வலிமை' வில்லன்

ABOUT THE AUTHOR

...view details