தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்திய அளவில் சாதனை படைத்த 'வலிமை'! - வலிமை அப்டேட்

சென்னை: அஜித்தின் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற மோஷன் போஸ்டர் எனும் சாதனையைப் படைத்துள்ளது.

valimai
valimai

By

Published : Jul 12, 2021, 1:08 PM IST

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், நேற்று (ஜூலை.11) வெளியானது. ’பிஜிஎம்’ கிங் யுவனின் இசையில், அஜித் மாஸாகக் காட்சியளிக்கிறார்.

ஒரு பெரும் கூட்டத்தை எதிர்த்து அஜித் நிற்பது போல் ஒரு ஸ்டில், க்ளீன் ஷேவ் செய்து கூலர்ஸ் அணிந்தபடி ஒரு ஸ்டில், கொஞ்சம் நரைத்த தாடியோடு கண்ணில் லென்ஸ் வைத்தபடி ஒரு ஸ்டில், என மோஷன் போஸ்டர் நகர்கிறது. இதுபோக போஸ்டர்கள் தனியாக விடப்பட்டுள்ளன.

போஸ்டரில் பலர் பைக்கில் துரத்துவது போன்ற காட்சியும் இருக்கிறது. இதில் ஒரு மாஸான பைக் சேசிங் காட்சியை நாம் எதிர்பார்க்கலாம். படத்துக்கு படம் அஜித் பைக் ஸ்டண்ட்கள் செய்தாலும், ஹெச். வினோத் மேக்கிங்கில் இந்த பைக் ஸ்டண்ட் காட்சி மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கண்ணில் லென்ஸ் வைத்திருக்கிறார் அஜித். கடைசியாக 'வரலாறு (காட்பாதர்)' படத்தில் கண்ணில் லென்ஸ் வைத்து நடித்திருந்தார். அந்த கெட்டப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்ட காலத்துக்குப் பிறகு அஜித் இப்படி தோன்றுகிறார்.

கையில் இரும்பு குண்டு ஒன்றைத் தூக்கியபடி வரும் காட்சியும் மாஸாக இருக்கிறது. ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் பணியாற்றிய திலிப் சுப்பராயண் தான் இதில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். எனவே மாஸ் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

'வலிமை' படம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், எந்த அப்டேட்டும் வராதால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை காண்போரிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்.

இப்படி மன'வலிமை'யோடு அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள் நேற்று (ஜூலை.12) படக்குழுவினருக்கு அப்டேட் கொடுத்து ஆச்சரியமூட்டினர்.

சாதனை படைத்த வலிமை அப்டேட்

வலிமை மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்து பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே ட்விட்டரில் உலக, இந்திய அளவில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் யூடியூப்பில் இந்திய அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையை 'வலிமை' பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் அஜித்தின் 'விஸ்வாசம்' உள்ளது.

இதனை ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில் #MostLikedIndianMPValimai என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வலிமை- இதெல்லாம் கவனிச்சீங்களா?

ABOUT THE AUTHOR

...view details