தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நேர்கொண்ட பார்வை' மகிழ்ச்சியான குழு - தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் - அஜித்தின் நேர்கொண்ட பார்வை

சென்னை: அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ajith
ajith

By

Published : Aug 9, 2021, 6:50 AM IST

இந்தியில் 'பிங்க்' தலைப்பில் வெளியான திரைப்படம் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அஜித் நடிப்பில் வெளியான இப்படத்தில், ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வினோத் இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.

இப்படத்தை இந்தியின் முன்னணி தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் (ஆகஸ்ட்.08) இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இதனை அஜித் ரசிகர்கள் '#2YearsofNerKondaPaarvai' என்ற ஹேஷ்டேக்கை ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். இந்நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியான குழு. இதன் அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 'நேர்கொண்ட பார்வை' குழுவினருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

வினேத் - அஜித் - போனிகபூர் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தற்போது 'வலிமை' படத்திலும் இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதையும் படிங்க: 'தல' காய்ச்சல்: 'நேர்கொண்ட பார்வை' பாக்கப் போறேன்... ப்ளீஸ் லீவு கொடுங்க!

ABOUT THE AUTHOR

...view details