நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த முடிந்த முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.